Theme Check

மக்களே கவனமா இருங்க.. அடுத்ததா ஒண்ணு.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

மக்களே கவனமா இருங்க.. அடுத்ததா ஒண்ணு.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

மக்களே கவனமா இருங்க.. அடுத்ததா ஒண்ணு.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
X

உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்தந்த நாட்டு அரசுகள் கையில் எடுத்து. இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்பட்டது.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா திரிபான ஒமைக்ரான் உலகம் முழுவதும் தீவிரமாக பரவத் தொடங்கியது.அதே சமயம், கடந்த சில நாட்களாக டெல்டா வகை தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 21.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த ஒரே நாளில் 71,365 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 8,92,828 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த கொரோனா திரிபு ஒமைக்ரானை விட தீவிர தொற்றுத்தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணரும், கொரோனா தொழில்நுட்ப முன்னணியாளருமான டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது:
WHO warns Covid-19 infections rising exponentially, solution is 'not  vaccines only' - France 24
“கொரோனா அலை தணிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், அடுத்த கொரோனா மாறுபாடு ஒமைக்ரானை விட மிகவும் தீவிரமானதாக இருக்கும்.

இதன் பொருள் என்னவென்றால், அது மிகவும் பரவக்கூடியதாக இருக்கும். இதனால், எதிர்கால கொரோனா பரவல் மாறுபாடுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது கடுமையானதாக இருக்குமா, இல்லையா..? என்பது பெரிய கேள்வி.

அடுத்த கொரோனா மாறுபாடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிக எளிதாக குறைக்கலாம். இதற்கு, தடுப்பூசிகள் குறைவான பலனைத் தரும்.

இருப்பினும், ஒமைக்ரான் அலையின்போது ஏற்பட்ட கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க வேண்டும்.

இதனால், கொரோனா பரவல் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருபவர்கள் மத்தியில் இது விரைவில் பரவ வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

Next Story
Share it