Theme Check

மக்களே கவனமா இருங்க.. தமிழகத்திற்கு வருது அடுத்த ஆபத்து.. அரசு எச்சரிக்கை..!

மக்களே கவனமா இருங்க.. தமிழகத்திற்கு வருது அடுத்த ஆபத்து.. அரசு எச்சரிக்கை..!

மக்களே கவனமா இருங்க.. தமிழகத்திற்கு வருது அடுத்த ஆபத்து.. அரசு எச்சரிக்கை..!
X

தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அடுத்து வரும் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் மே மாதம் இறுதிவரை 2548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it