மக்களே உஷார் !! அடுத்த மாதம் இந்த நாட்களில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டும்.
மக்களே உஷார் !! அடுத்த மாதம் இந்த நாட்களில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டும்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கூட பாதிப்பு எண்ணிக்கை ஏறமுகத்தில் தான் உள்ளது. இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில் இருந்து 80% பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் மே மாதம் மத்தியில் நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 38 முதல் 48 லட்சம் பேராக இருப்பார்கள் என கணிக்கப்பட்டு இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் பற்றியும் அதன் தாக்கம் குறித்தும் கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் 3 பேர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி,அடுத்த மாதம் மே 14 - மே 18ம் கால கட்டத்தில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டும் என்றும் அப்போது புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 4.4 லட்சம் பேராக இருப்பார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா பரவலின் உச்சக்கட்ட காலம் மே 4 முதல் 18 என்றும் உச்சகட்ட எண்ணிக்கை 38 லட்சம் முதல் 48 லட்சம் பேர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் கடைசி வாரமான தற்போது நாட்டில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 28,13,658 பேர் ஆவர்.

