Theme Check

மக்களே உஷார்.. வங்கிகள் செயல்படாது !!

மக்களே உஷார்.. வங்கிகள் செயல்படாது !!

மக்களே உஷார்.. வங்கிகள் செயல்படாது !!
X

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் (ஏஐபிஇஏ), தேசிய வங்கி ஊழியா்கள் அமைப்பு (என்ஓபிடபிள்யு) உள்பட 9 வங்கி சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு (யுஎஃப்பியு) வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக டெல்லியில் நேற்று இச்சங்கத்தினர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஏஐபிஇஏ பொதுச் செயலா் சி.ஹெச். வெங்கடாசலம் கூறுகையில், அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் ஓய்வூதியத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், வாரத்துக்கு 5 நாள் மட்டும் வேலை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது, என்றாா்.

dwsd

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தனா்.

ஏஐபிஓசி பொதுச் செயலா் செளமியா தத்தா கூறுகையில், எங்களுடைய கோரிக்கைகளுக்கு மத்திய அரசும் வங்கி நிா்வாகமும் மதிப்பளிக்கவில்லை எனில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து 7 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியா்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது, என்றாா்.

இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றால் நாடு முழுவதும் வங்கிச் சேவையானது, மாதத்தில் கடைசி வாரம், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூன் 27) கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it