Theme Check

மக்களே, ஒரு மாசம் இந்தப் பக்கம் போகாதீங்க..!

மக்களே, ஒரு மாசம் இந்தப் பக்கம் போகாதீங்க..!

மக்களே, ஒரு மாசம் இந்தப் பக்கம் போகாதீங்க..!
X

வேலூர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததால் நாளை முதல் ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்து உள்ளதால் அதனை சீர் செய்ய ரயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உத்தேசித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் பணிகளை தொடங்க முடிவு செய்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்தில் பள்ளி மாணவர்களின் தேர்வுகளுக்காகவும், சில நிர்வாக காரணங்களுக்காகவும் சீரமைப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
வேலூர் காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை
பாலம் மிகவும் பழுதடைந்துள்ள காரணத்தினாலும், நீண்ட காலத்திற்கு பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையிலும், இனியும் சீரமைப்பு பணிகள் கால தாமதப்படுத்த முடியாது என்பதால், பொதுமக்கள் நலன் கருதி, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் நாளை (31-ம் தேதி) முதல் அனைத்து வாகனப் போக்குவரத்துகளையும் நிறுத்தி பாலம் பழுது பார்க்கும் பணி தொடங்கப்படுகிறது.

எனவே, நாளை (31-ம் தேதி) முதல் ஒரு மாதத்திற்கு இந்த பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் சீரமைப்பு பணியின் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை ஒரு மாத காலத்திற்கு பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story
Share it