Theme Check

2 தவணை தடுப்பூசி செலுத்திய ஜனாதிபதிக்கு தொற்று உறுதி.. அச்சத்தில் மக்கள்..!

2 தவணை தடுப்பூசி செலுத்திய ஜனாதிபதிக்கு தொற்று உறுதி.. அச்சத்தில் மக்கள்..!

2 தவணை தடுப்பூசி செலுத்திய ஜனாதிபதிக்கு தொற்று உறுதி.. அச்சத்தில் மக்கள்..!
X

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா. கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளும் செலுத்தியுள்ள சிரில் ராமபோசா, கடந்த வாரம் 4 ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று கேப் டவுன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சிரில் ராமபோசாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறி கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சிரில் ராமபோசா நலமாக இருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் சூழலில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள அதிபருக்கு தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it