Theme Check

பிரதமர் மோடிக்கு மக்கள் விளக்கு ஏற்றி நன்றி !!

பிரதமர் மோடிக்கு மக்கள் விளக்கு ஏற்றி நன்றி !!

பிரதமர் மோடிக்கு மக்கள் விளக்கு ஏற்றி நன்றி !!
X

இந்தியாவில் மிக நீளமான சாலைப் பாலம் அஸ்ஸாமில் அமைய இருக்கிறது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார். இதன் சில பகுதிகள் அசாமிலும், சில பகுதிகள் மேகாலயாவின் காரோ குன்றுகள் பகுதியிலும் அமைய உள்ளன. மேலும் சில பகுதிகள் வங்காள தேசத்தின் சர்வதேச எல்லையையொட்டி 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைய இருக்கிறது.

இந்த பாலம் கட்டப்பட்ட பிறகு பயண நேரம் சுமார் 5 மணி நேரம் வரை மிச்சப்படுத்துவதோடு ஒரு மணி நேர பரிதாப படகு பயணத்தையும் தவிர்க்கலாம். ஜப்பான் நிறுவனம் இந்த திட்டத்திற்கு நிதிஉதவி அளிக்க சம்மதித்தை அடுத்து எல் அண்ட் டி நிறுவனம், 4 வழி பயணப் பாலத்தை அமைத்து தர ஒப்பந்தம் பெற்றுள்ளது.

இந்நிலையில், மஜூலி ஆற்றிடை தீவுக்கு பாலம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் விளக்கு ஏற்றியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்பகுதியே திருவிழாக் கோலத்துடன் காட்சியளித்தது.

Tags:
Next Story
Share it