Theme Check

மக்களே கவனம்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

மக்களே கவனம்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

மக்களே கவனம்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. சுகாதாரத்துறை எச்சரிக்கை..!
X

‘தமிழகத்தில் இதுவரை 51 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்’ என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“தமிழகம் முழுவதும் நடைபெற்ற 25வது மெகா தடுப்பூசி முகாமில் 5,53,459 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும், 18 வயதிற்கு மேற்பட்ட 5,32 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 கோடிக்கு மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 92% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 80% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். மேலும், 12 முதல் 14 வயது உடைய 4.29 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழகத்தில் இதுவரை 51 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்ற நாடுகளில் நான்காவது அலை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் நாமும் தொற்றினால் அவதிப்படும் சூழல் உருவாகும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
Share it