Theme Check

மக்களே, திட்டமிட்டு செயல்படுங்க.. வங்கிகள் 3 நாள் இயங்காது..!

மக்களே, திட்டமிட்டு செயல்படுங்க.. வங்கிகள் 3 நாள் இயங்காது..!

மக்களே, திட்டமிட்டு செயல்படுங்க.. வங்கிகள் 3 நாள் இயங்காது..!
X

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை உட்பட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 27-ம் தேதி வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை. ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது.

நிலுவையில் உள்ள இதர பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

வருகிற 25-ம் தேதி (4-வது சனிக்கிழமை) மற்றும் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் வார விடுமுறை. இதையடுத்து 27-ம் தேதி (திங்கட்கிழமை) வேலை நிறுத்தம் என்பதால் அன்று பரிவர்த்தனை நடைபெறாது என்று வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செயல்படாது என்பதால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னதாகவே திட்டமிட்டு செயல்படவும்.

Next Story
Share it