மக்கள் அமைதி காக்க வேண்டும்.. இலங்கை ஜனாதிபதி வேண்டுகோள்..!
மக்கள் அமைதி காக்க வேண்டும்.. இலங்கை ஜனாதிபதி வேண்டுகோள்..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே காரணம். எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்’ எனக் கூறி, கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து, இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளதால், சில இடங்களில் துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் மக்கள் அமைதி காக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத் தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

