Theme Check

மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டாம்.. பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி !!

மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டாம்.. பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி !!

மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டாம்.. பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி !!
X

அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணியவோ அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யவோ தேவையில்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று மற்றும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா, அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் சில கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

mask

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் . மேலும் வீட்டில் இருந்து பனி புரிந்தவர்கள் இனி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இல்லை, முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், பொதுமக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தற்போதைக்கு தொடரும் என்றும் கூறினார்.

கூடுதல் தடுப்பூசி தொடர்பான அசாதாரண பரப்புரையினால் PLAN B விதிமுறைகளை பொதுமக்கள் நல்ல முறையில் பின்பற்றியதால், மீண்டும் A விதிமுறைகளுக்கு திரும்பலாம் என்றும், B விதிமுறைகள் அடுத்தவாரம் காலாவதியாகும் என்றும் ஜான்சன் கூறினார்.

mask

கொரோனா சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்ற நடைமுறை முடிவுக்கு வரும் என்றும், இருப்பினும் வணிக நிறுவனங்கள் விரும்பினால் கொரோனா பாஸ்களை தொடரலாம். இங்கிலாந்தில் ஒமைக்ரான் அலை உச்சத்தை எட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறிவரும் நிலையில், போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


newstm.in

Next Story
Share it