புயலால் மக்கள் தவிப்பு.. பாதிப்பு மத்தியில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை !!

புயலால் மக்கள் தவிப்பு.. பாதிப்பு மத்தியில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை !!

புயலால் மக்கள் தவிப்பு.. பாதிப்பு மத்தியில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை !!
X

கோடை வெயில் கொளுத்தும் வேளையில் திடீரென உருவானது டவ் தே புயல். இப்புயல் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை கொட்டியது. எனினும் அதன்பின்னர் தான் மிகத்தீவிர புயலாக மாறி வடமாநிலங்களை நோக்கி நகர்ந்தது.

பின்னர் கோரதாண்டவம் ஆடிய டவ் தே புயல், குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன. டவ்-தே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்தி நடிகை நடிகை தீபிகா சிங், டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களுக்கு நடுவில் நின்று மழையில் நனைந்தப்படி புகைப்படங்கள் எடுத்துள்ளார், மேலும் ஒரு நடனமும் போட்டுள்ளார்.

புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது, அதுவாகவே கடந்து போகும் என்று நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it