Theme Check

மக்களே உஷார்..!! தமிழகத்தில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு..!!

மக்களே உஷார்..!! தமிழகத்தில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு..!!

மக்களே உஷார்..!! தமிழகத்தில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு..!!
X

தமிழ்நாட்டில் நேற்று 2731 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.ஒரே நாளில் 2000 பேருக்கு மேல் தொற்று உறுதியானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் மேலும் 2,481 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,381 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 5,69,255 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 688 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,07,058 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16,577 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,17,382 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 5,70,33,924 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,814 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Next Story
Share it