மக்களே உஷார்.. சென்னையில் காலாவதி குளிர்பானங்கள்..!
மக்களே உஷார்.. சென்னையில் காலாவதி குளிர்பானங்கள்..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் இன்று காலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில், 2 தனியார் குடோன்களில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை புளியந்தோப்பு, ஸ்டீபன்சன் சாலை பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக இன்று காலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் பெரம்பூர் பகுதி அலுவலர் ஜெபராஜ் முன்னிலையில் ஜெயகோபால், அழகுபாண்டி, கண்ணன், ராஜா ஆகிய தனிப்படையினர், பின்னி மில் அருகே உள்ள 2 தனியார் குடோன்களில் அதிரடி சோதனை செய்தனர்.
அந்த குடோன்களில், குளிர்பானங்களுக்கு நடுவே ஆங்காங்கே காலாவதியான குளிர்பானங்கள் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடோன் உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அவர் முறையான பதில் கூறாததால், அங்கிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான காலாவதி குளிர்பானங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story

