Theme Check

ஒய்வு பெற்று ஊருக்கு திரும்பிய ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி வரவேற்ற மக்கள் !!

ஒய்வு பெற்று ஊருக்கு திரும்பிய ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி வரவேற்ற மக்கள் !!

ஒய்வு பெற்று ஊருக்கு திரும்பிய ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி வரவேற்ற மக்கள் !!
X

மத்திய பிரதேசத்தை சேர்ந்த நீமுச் பகுதியில் வசித்து வந்த விஜய் சிங் இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்தவர். இவர் ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்று தமது சொந்த ஊருக்கு திரும்பினார்.
நாட்டுக்காக சேவை செய்து நிறைவுடன் திரும்பிய அவரின் வருகையை அந்த பகுதி மக்கள் தங்களது உள்ளங்கைகளை நீட்டி ராணுவ வீரரின் கால்களை தாங்கி வரவேற்றது காண்பவர்களின் உள்ளத்தை பரவசமடையச் செய்தது. தமது உள்ளங்கைகளின் மீது அவரை நடந்து செல்லும்படி தெரிவித்தனர்.

இதன் பிறகு அவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இதை கண்டு மிகவும் உணர்ச்சி ததும்ப பேசிய விஜய் சிங், 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேவையாற்றிதற்கான முழுப்பலனையும் இன்று அடைந்துள்ளேன். மக்களின் இந்த வரவேற்பு இன்று எனக்கு அதிக பெருமை அளிக்கிறது. இதை என் சிரம் தாழ்த்தி தாழ்மையுடன் ஏற்று கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it