Theme Check

போதையில் மது என நினைத்து ஆசிட் குடித்த நபர்கள்!!

போதையில் மது என நினைத்து ஆசிட் குடித்த நபர்கள்!!

போதையில் மது என நினைத்து ஆசிட் குடித்த நபர்கள்!!
X

போதையில் மதுபானம் என நினைத்து ஆசிட் குடித்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தைச் சேர்ந்த பாபிராம் ரியாங் என்பவர் மனைவி குழந்தையுடன் கஞ்சன்சாராவில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றார்.

இதையடுத்து அங்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் மது குடித்தனர். அப்போது குடிபோதையிலிருந்த சச்சீந்திரா ரியாங், ஆதிராம் ரியாங் பாபிராம் ரியாங் ஆகிய மூன்று பேர் மதுபானம் என நினைத்து அமிலத்தைக் குடித்தனர்.

acid 1

உடனே அவர்கள் மயங்கி கீழே விழுந்தனர். விஷயம் அறிந்து உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it