இந்த வகை ரத்தம் கொண்டவர்களுக்கு எளிதில் கொரோனா பாதிப்பு..!

இந்த வகை ரத்தம் கொண்டவர்களுக்கு எளிதில் கொரோனா பாதிப்பு..!

இந்த வகை ரத்தம் கொண்டவர்களுக்கு எளிதில் கொரோனா பாதிப்பு..!
X

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவி விட்டது.

டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையின் ரத்த மாற்று ஆராய்ச்சித்துறையின் மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2 ஆயிரத்து 586 கொரோனா நோயாளிகளிடம் சோதனை நடத்தினர்.

சோதனையில், ஏ, பி மற்றும் ஆர்ஹெச் பாசிட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்கள் எளிதில் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் ஓ, ஏபி மற்றும் ஆர்ஹெச் நெகடிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது தெரியவந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it