ஜனங்களின் கலைஞன் விவேக்.. வீடியோ வெளியிட்டு கமல் புகழஞ்சலி !

ஜனங்களின் கலைஞன் விவேக்.. வீடியோ வெளியிட்டு கமல் புகழஞ்சலி !

ஜனங்களின் கலைஞன் விவேக்.. வீடியோ வெளியிட்டு கமல் புகழஞ்சலி !
X

மரங்களை விதைத்து மனங்களில் முளைத்த ஜனங்களின் கலைஞனுக்கு என் புகழஞ்சலி என கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்தனர். பின்னர் நேற்று மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளம் புடைசூழ அவருடைய விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. அதில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றனர்.

மாலை 5 மணியளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்கு வந்த விவேக்கின் உடலுக்கு அவருடைய மகள் தேஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். அதை தொடர்ந்து உறவினர்களும் குடும்ப வழக்கப் படி விவேக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

பிறகு காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருக்கு புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும், அவருடைய கலை சமூகச் சேவையை கவுரவிக்கும் நோக்கத்துடனும் 72 குண்டுகள் முழுங்க விவேக்கின் உடலுக்கு காவல்துறையினர் இறுதி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து விவேக்கின் பூத உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அதற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மின்மாயனத்தை விட்டு வெளியேறினர். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.

அதன்பின்னர் இரவில் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றையும் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அதில், ஒரு கலைஞன் சமூகத்திற்கு பாடுபட்டார் என்பதற்கு விவேக் சிறந்த எடுத்துக்காட்டு என கூறினார். தன்னுடம் இணைந்து விவேக் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனை அவர் என்னிடம் கூறியுள்ளார். ஆனால் இந்தியன் 2 படத்தில் இருவரும் நடித்துள்ளோம். அப்படத்தில் விவேக்-க்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

மரங்களை விதைத்து மனங்களில் முளைத்த ஜனங்களின் கலைஞனுக்கு என் புகழஞ்சலி என்றும் கமல் கூறியுள்ளார்


newstm.in

Tags:
Next Story
Share it