திமுகவில் ஐக்கியமாகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்..!

திமுகவில் ஐக்கியமாகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்..!

திமுகவில் ஐக்கியமாகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்..!
X

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் கட்சியில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பொன்ராஜ், சி.கே குமரவேல், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து வெளியேறினர்.

இது குறித்து பேசிய மகேந்திரன், “கட்சியில் ஜனநாயகம் இல்லை. தேர்தல் முடிவுக்குப் பிறகு கமல்ஹாசன் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மாறவில்லை. கட்சியில் எங்கள் குரலுக்கு மதிப்பு இல்லாததால் கட்சியில் இருந்து வெளியேறினேன்” என்று, கமல்ஹாசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கமல்ஹாசனுக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தின் முக்கியமான தலைவராக பார்க்கப்பட்ட மகேந்திரன் விலகியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க மகேந்திரனை திமுக தன் பக்கம் இழுக்க முயற்சித்ததாகவும், திமுக பிரமுகர்கள் சிலர் அவரிடம் பேசியதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் நாளை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
Next Story
Share it