Theme Check

பெரியார் சிலை அவமதிப்பு.. கைதான 2 பேர் மீது பாய்ந்த‌து குண்டாஸ்..!

பெரியார் சிலை அவமதிப்பு.. கைதான 2 பேர் மீது பாய்ந்த‌து குண்டாஸ்..!

பெரியார் சிலை அவமதிப்பு.. கைதான 2 பேர் மீது பாய்ந்த‌து குண்டாஸ்..!
X

கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் இருக்கிறது. அந்தப் படிப்பகம் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், காவி நிறப் பொடியை தூவியும் அவமதிப்பு செய்திருந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்து அமைப்பைச் சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர்தான் பெரியார் சிலையை அவமதிப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Goondas Act invoke against two person in kovai || பெரியார் சிலையை அவமதித்த  வழக்கு.. கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த‌து
இவர்கள் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொது ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story
Share it