வரும் 16-ம் தேதி முதல் இதற்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
வரும் 16-ம் தேதி முதல் இதற்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

சென்னையில் வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில், தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
![]()
இதனிடையே, ‘கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக புத்தகக் கண்காட்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால்,100 கோடி ரூபாய் மதிப்பில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் தேங்கியுள்ளது.
தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து, நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

