Theme Check

ராஜபக்சேவை கைது பண்ணுங்க.. கொழும்பு நீதிமன்றத்தில் மனு..!

ராஜபக்சேவை கைது பண்ணுங்க.. கொழும்பு நீதிமன்றத்தில் மனு..!

ராஜபக்சேவை கைது பண்ணுங்க.. கொழும்பு நீதிமன்றத்தில் மனு..!
X

இலங்கை வன்முறைக்கு காரணமான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிடக்கோரி, கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த, ஆத்திரமடைந்த மக்கள் ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைத்தனர்.

இந்த வன்முறையில் 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இலங்கை வன்முறைக்கு காரணமான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவருடைய மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஜான்சன் பெர்னான்டோ, பவித்ரா வன்னியாரச்சி, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த, சஞ்சீவா திரிமன்னே ஆகிய 7 பேரையும் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் ஒருவர் கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்சே மற்றும் அவருடைய குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியிருப்பதும், மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
Share it