தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மீண்டும் உயர தொடங்கிய பெட்ரோல் டீசல் விலை !!
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மீண்டும் உயர தொடங்கிய பெட்ரோல் டீசல் விலை !!

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கிவிட்டன. கடைசியாக ஏப்ரல் 15-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகளும், டீசல் லிட்டருக்கு 13 காசுகளும் குறைக்கப்பட்டன. அன்று முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பெட்ரோல், டீசல் விலை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 17 நாட்களுக்கு பிறகு இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.92.55 க்கு விற்பனையாகிவருகிறது. டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
NEWSTM.IN

