இந்த 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது - மக்கள் மகிழ்ச்சி..!
இந்த 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது - மக்கள் மகிழ்ச்சி..!

மக்கள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு இந்தியாவின் நான்கு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்படும் வரி நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட மாநிலங்களில் எரிவாயுக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 92.59-ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 85.98-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் விதிக்கப்படும் வரி நடைமுறைகளால் எரிவாயுவின் விலை ரூ. 100-யை கடந்து விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, வாழை இலை போன்ற பொருட்களின் விலை நாளுக்கு நாளு உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக நடுத்தர மக்கள் செய்வதறியது திகைத்து போயுள்ளனர்
இந்நிலையில் நாட்டின் நான்கு மாநிலங்கள் பெட்ரோல் மீது விதிகப்படும் வரி அமைப்பில் மாற்றம் செய்துள்ளன. அதன்படி ராஜஸ்தான் அரசு எரிவாயுவுக்கான வாட் வரியை 38 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது. அதன்படி, அசாம் அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்திருந்த கூடுதல் வரியில் இருந்து ரூ. 5 வரை குறைத்துள்ளது.
அதேபோல மேற்கு வங்க அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் வரி குறைப்பு செய்துள்ளது.
மேலும், மேகாலயா மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 31.62 சதவீத வரி 20 சதவீதமாகவும், டீசல் விதிக்கப்பட்ட 22.95 சதவீத வரி 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.40 வரை குறைந்துள்ளது. அதேப்பொல டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 7.10 வரை குறைக்கப்பட்டுள்ளது.

