Theme Check

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு !! இது தமிழகத்திற்கு அல்ல

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு !! இது தமிழகத்திற்கு அல்ல

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு !! இது தமிழகத்திற்கு அல்ல
X

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை மீதான 2% வாட் வரியை உடனடியாக குறைக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.கிட்டத்தட்ட சதத்தை நெருங்கியது பெட்ரோல் விலை என்றே கூறலாம்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை மத்திய அரசு நீக்கிவிட்டு தமிழிசையை அப்பொறுப்புக்கு நியமித்தது. அதுமுதல் தொடர் ஆய்வுகளையும், அதற்கான நடவடிக்கைகளையும் தமிழிசை எடுக்கத் தொடங்கியுள்ளார்.அண்மையில் அங்கன்வாடி மையத்துக்கு சென்று ஆய்வு செய்த தமிழிசை அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தரப்படுகிறது. அக்குழந்தைகளின் புரதச் சத்துத் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இனி வாரம் அதை மூன்று முட்டைகள் தர உத்தரவிட்டார் .

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீதான 2% வாட் வரியை உடனடியாக குறைக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இந்த வாட் வரி குறைப்பால் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைகிறது என கூறியுள்ளார்.

Tags:
Next Story
Share it