பரபரப்பான பகுதியில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு - அச்சத்தில் மக்கள்
கோவை கோணார் வீதியில் செயல்பட்டு வரும் இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகத்தின் வாசலில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலக வாசலில் உடைந்த பாட்டில்கள் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவை கோணார் வீதியில் செயல்பட்டு வரும் இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகத்தின் வாசலில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அலுவலக வாசலில் உடைந்த பாட்டில்கள் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை காவல்துறையினர் உறுதி செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கோவையில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in