பெட்ரோல், டீசல் விலை குறைவு!!
வாகன ஓட்டிகளுக்கு தினந்தோறும் காலையில் பெட்ரோல் நிரப்ப செல்லும் போது அதிர்ச்சி காத்திருக்கிறது. விலை ஏறும் போது ஒரேயடியாக ஏறும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும் சமயங்களில் பைசா வித்தியாசத்தில் தான் குறைகிறது என்று வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக புலம்பி வருகின்றனர்.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தாலும், விலை பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சர்வ தேச சந்தைகளில் கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் இருந்தாலும், இங்கே பெட்ரோல், டீசல் விலைகளில் பெரிய அளவில் குறைவதில்லை என்கிற எண்ணம் வாகன ஓட்டிகளிடையே பல காலங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை சிறிதளவு குறைந்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில், ரூ.73.33 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சென்னையில் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.66.75ஆக விற்பனையாகிறது. இது நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது
newstm.in