15 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு !!
15 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு !!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையைக் கடைசியாக மார்ச் இறுதியில் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டன. அதன்பின் கடந்த 15 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து 92 ரூபாய் 43 காசுகளாக உள்ளது. டீசல் விலை 13 காசுகள் குறைந்து 85 ரூபாய் 75 காசுகளாக உள்ளது.
Tags:
Next Story

