Theme Check

சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ..!

சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ..!

சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ..!
X

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த 137 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சுமார் நான்கரை மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிகழ்வு வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it