ரூ.90-ஐ தாண்டிய பெட்ரோல் விலை - மக்கள் அதிர்ச்சி !!
ரூ.90-ஐ தாண்டிய பெட்ரோல் விலை - மக்கள் அதிர்ச்சி !!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் தினமும் மாற்றியமைக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.89.96க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.82.90க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டி உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 ஆகவும், டீசல் விலை ரூ.83.18 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

