Theme Check

இன்றே வாங்க திட்டம்.. நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் !!

இன்றே வாங்க திட்டம்.. நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் !!

இன்றே வாங்க திட்டம்.. நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் !!
X

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. இதனால் குடிகாரர்கள் மதுபாட்டில்களை வாங்கிவைக்க கடைகள் முன்பு குவிந்துவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமானதையடுத்து இரவுநேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

tasmak

இந்த நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், அண்மையில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26ஆம் தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது.

இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

tasmak

தமிழகத்தில் வருகிற 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போதும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. இதனால் நாளைக்கு குடிக்க இன்றே மதுபாட்டில்களை வாங்கி வைக்க குடிகாரர்கள் பலரும்திட்டம் போட்டுள்ளனர். இதனால் இப்போதே டாஸ்மாக் முன்பு சிலர் காத்திருக்கின்றனர். மொத்தத்தில் இந்த மாதத்தில் 4 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it