Theme Check

காதலியுடன் ஜோடி சேர திட்டம்.. அதற்காக இப்படியா? தோழி எரித்துக்கொலை..

காதலியுடன் ஜோடி சேர திட்டம்.. அதற்காக இப்படியா? தோழி எரித்துக்கொலை..

காதலியுடன் ஜோடி சேர திட்டம்.. அதற்காக இப்படியா? தோழி எரித்துக்கொலை..
X

தங்கள் காதலை நிறைவேற்றிக்கொள்ள காதலனும், காதலியும் சேர்ந்து நட்பாக பழகிய இளம் பெண் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கபில், ரூபி ஷர்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு ரூபி வீட்டில் எதிர்ப்பு இருந்துள்ளது. இந்நிலையில் எப்படியாவது ஒன்றாக வாழ வேண்டும் என திட்டம்போட்ட இந்த காதல் ஜோடி அதற்கு அப்பாவி பெண் ஒருவரை பலியாக்கியுள்ளனர். கபில் பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் சார்ச்சா என்னும் பகுதியை சேர்ந்தவர் பூனம் என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.

காதலியுடன் ஜோடி சேர திட்டம்.. அதற்காக இப்படியா? தோழி எரித்துக்கொலை..

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து நடந்த விசாரணையில் கபில், ரூபி ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்களது காதலுக்கு ரூபி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், பூனத்தை தனியே அழைத்து சென்று அவரை கொலை செய்து எரித்துவிட்டதாகவும், ரூபித்தான் இறந்துவிட்டார் என காட்டுவதற்காக அந்த இடத்தில் ரூபியின் பொருட்களை போட்டுவிட்டு சென்றதாகவும் கபில் வாக்குமூலம் அளித்தார். ரூபி இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தால் நாங்கள் இருவரும் வேறு எங்காவது சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என இருந்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர். தங்கள் காதலை நிறைவேற்றுக்கொள்ள ஒன்னும் தெரியாத அப்பாவி பெண்ணை இவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it