Theme Check

விமான விபத்து.. சர்வதேச புகழ்பெற்ற இசை தயாரிப்பாளர் குடும்பத்துடன் பலி !!

விமான விபத்து.. சர்வதேச புகழ்பெற்ற இசை தயாரிப்பாளர் குடும்பத்துடன் பலி !!

விமான விபத்து.. சர்வதேச புகழ்பெற்ற இசை தயாரிப்பாளர் குடும்பத்துடன் பலி !!
X

விமானம் ஓடுபாதையிலேயே விழுந்து விபத்திற்குள்ளானதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசை தயாரிப்பாளர் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஃபுளோரிடாவில் இருந்து டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இஸபெல்லா நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று தலைநகர் சான் டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.Flow La Movie

ஹெலிடோச அவியேஷன் குழுமத்திற்கு சொந்தமான இந்த விமானம் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலேயே விழுந்தது.

இந்த விபத்தில் 7 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என அனைவரும் உயிரிழந்தனர். பயணிகளில் ஒருவர் மட்டுமே டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்தவர். எஞ்சிய 6 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Flow La Movie

இந்த நிலையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசை தயாரிப்பாளர் ஒருவர் குடும்பத்துடன் இந்த விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. புவேர்ட்டோ ரிக்கன்(Puerto Rican)-ஐ சேர்ந்த இசை தயாரிப்பாளர் ஃப்ளோ லா மூவி தனது மனைவி, 4 வயது மகனுடன் அந்த விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.

La-movie

இவர்கள் மூவரும் உள்பட 9 பேரும் அந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். பல்வேறு தரப்பினரும் இவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it