Theme Check

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்!!

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்!!

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்!!
X

தென்கொரியா நாட்டின் விமானப்படையின் இரு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன. அவை கேடி-1 பயிற்சி விமானங்கள்.

விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தலைநகர் சியோலில் இருந்து சுமார் 440 கி.மீ. தென்கிழக்கில் உள்ள சச்சியோன் என்ற இடத்தில் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தன.

விபத்து , சச்சியோன் விமானப்படை தளத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது. இரு விமானங்களிலும் தலா 2 விமானிகள் மட்டுமே பயணித்தனர்.

aircrafts

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மீட்பு பணிகளுக்காக 2 ஹெலிகாப்டர்களும், 14 வாகனங்களும், 35 மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4ஆவது விமானி படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவரை காணவில்லை என்றும் தெளிவற்ற தகவல் வெளியாகியுள்ளது.

aircrafts

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது. விமானங்கள் நடுவானில் மோதி கீழே விழுந்தபோதும் வீடுகளுக்கு சேதமோ, பொதுமக்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை.

newstm.in


Next Story
Share it