விவேக்குடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்! ரஜினி ட்வீட்!
விவேக்குடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்! ரஜினி ட்வீட்!

தமிழ் திரையுலகில் தன் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவருடைய கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் திறமை வாய்ந்த நடிப்பால் சின்னக் கலைவாணர் என செல்லமாக அழைக்கப்பட்டார் பத்மஸ்ரீ விவேக். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
#RipVivek pic.twitter.com/MSYVv9smsY
— Rajinikanth (@rajinikanth) April 17, 2021
சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என் ட்வீட் செய்துள்ளார். திரைத்துறையினர், நண்பர்கள், ரசிகர்கள் பலரும் நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
newstm.in

