அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 6 மணிக்கு வலிமை படத்தின் பிரமாண்ட அப்டேட் !

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 6 மணிக்கு வலிமை படத்தின் பிரமாண்ட அப்டேட் !

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 6 மணிக்கு வலிமை படத்தின் பிரமாண்ட அப்டேட் !
X

உண்மையில் அஜித் ரசிகர்கள் பாவம் தான். பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் மெயின் அலி, தொடங்கி யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கூட வலிமை அப்டேட் கேட்டுவிட்டனர் அஜித் ரசிகர்கள். அண்மையில் சாமியார் ஒருவரிடம் குறி கேட்கும் நிலையும் ஏற்பட்டது.

இதனால் படக்குழு உண்மையில் வேதனை அடைந்து தற்போது அப்டேட் கொடுக்க தயாராகிவிட்டனர். அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள், ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இந்த மாதம் வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வலிமை படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் ValimaiMotionPoster என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it