Theme Check

பெண் இஸ்திரி தொழிலாளிக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி ..!

பெண் இஸ்திரி தொழிலாளிக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி ..!

பெண் இஸ்திரி தொழிலாளிக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி ..!
X

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, கடந்த வாரம் தொகுதி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இஸ்திரி தொழிலாளி செல்வி (48) என்பவர் உதயநிதியிடம், “பல ஆண்டுகளாக சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜாரில் இஸ்திரி வேலை செய்து வருகிறேன். எங்களுக்கென ஒரு இஸ்திரி வண்டி வாங்க பணம் இல்லை. எனவே, அதற்கு நீங்கள் உதவி செய்யவேண்டும்” என, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதிக்கு நேரில் சென்று, இஸ்திரி தொழிலாளி செல்வியை தன்னுடைய வாகனத்திலேயே அழைத்து வந்து, சென்னை திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய இஸ்திரி வண்டியையும் இஸ்திரி பெட்டியையும் பரிசாக வழங்கி செல்விக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியின்போது, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் காமராஜ் மற்றும் மதன் மோகன் ஆகியோர் உடனிருந்தார்.



தன்னுடைய வாகனத்திலேயே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தனது கோரிக்கையை நிறைவேற்றித் தந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு செல்வி நன்றி தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it