தயவு செய்து நம்பாதீங்க !! கொரோனா தடுப்பூசி குறித்து கிளம்பும் சர்ச்சை
தயவு செய்து நம்பாதீங்க !! கொரோனா தடுப்பூசி குறித்து கிளம்பும் சர்ச்சை

கொரோனாவுக்காக தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் உயிரிழந்துவிடுவார்கள் என்று சமூகவலைதளங்களில் பரவி வந்தது குறித்த உண்மை பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.
நோபல் பரிசு வென்ற ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் உயிர்வாழ வாய்ப்பே கிடையாது என்று கூறியதாக செய்திகள் இணையதளங்களில் பரவி வந்தன. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அசாமின் மெகாலாயா போலீஸ், இது முற்றிலும் தவறான செய்தி என்று கூறியுள்ளது
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அசாம் மாநில காவல்துறை, கொரோனாவுக்கு எதிராக போராடும் தடுப்பூசிகள் குறித்து தவறான மற்றும் பொய்யான செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்கள் ஃபார்வாடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஃபிரஞ்சு நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற ஆய்வாளர் பேசுவது சமூக ஊடகங்களில் தவறான சூழலுடன் பகிரப்படுகிறது. உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பொதுமக்கள் யாரும் ஊக்குவிக்க வேண்டாம் என வலியுறுத்துகிறோம். போலி செய்திகள் வைரஸை போன்று ஆபத்தானவை என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் என அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது
கொரோனா தடுப்பூசி தொடர்பாக வெளியான இந்த தகவலை சமூக ஊடகங்களில் பலரும் ஷேர் செய்துள்ளனர். உலகம் ஏற்கனவே கொரோனா வைரஸால் மிகுந்த மனசோர்வில் உள்ளது. இந்த உயிர்கொல்லி வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் மேலும் பொதுமக்களிடம் பதற்றத்தை உண்டாக்குகிறது. இதை தடுக்க அரசு முறையான கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
A misleading quote attributed to a French Nobel Laureate about Vaccines is being shared on Social Media with a false context.
— Assam Police (@assampolice) May 25, 2021
We request citizens to not promote these unverified forwards.
Remember, Misinformation can be as deadly as the virus itself.#ThinkBeforeYouShare pic.twitter.com/jBjColRZOe

