மாநாடு படத்தை பார்கும் போது தயவு செய்து இதை செய்யாதீர்கள்- இயக்குநர் வெங்கட் பிரபு அன்பு கோரிக்கை !!

மாநாடு படத்தை பார்கும் போது தயவு செய்து இதை செய்யாதீர்கள்- இயக்குநர் வெங்கட் பிரபு அன்பு கோரிக்கை !!

மாநாடு படத்தை பார்கும் போது தயவு செய்து இதை செய்யாதீர்கள்- இயக்குநர் வெங்கட் பிரபு அன்பு கோரிக்கை !!
X

நடிகர்கள் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிம்பு நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு ஒரு பெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்கள் பெரும்பாலானோர் தங்கள் செல்போனில் சில காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
venkat prabu
இந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தாெடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாநாடு திரைப்படத்தின் மீது நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தி வரும் அதீத அன்புக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து, அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது குற்றம். அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் காணட்டும், என தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it