கள்ளக்காதலனோடு உல்லாசம்! நேரில் பார்த்த கணவன் கொலை!!
ஆத்திரமடைந்த மனைவி, அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, தன்னுடைய கணவன், தங்களுடைய 16 வயது மகளையே கற்பழிக்க முயன்றதாகவும், அதனால் அம்மிக்கல்லை தூக்கி அவர் தலையில் போட்டு கொலை செய்து விட்டதாக கூறினார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படவெட்டி என்பவரின் மனைவி நளா, திருமணமான அவருடைய சொந்தக்காரர் ஒருவரோடு தகாத உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. அதனை படவெட்டி பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் நளா தொடர்ந்து அந்த நபருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படவெட்டி போதையில் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, தன்னுடைய கணவன், தங்களுடைய 16 வயது மகளையே கற்பழிக்க முயன்றதாகவும், அதனால் அம்மிக்கல்லை தூக்கி அவர் தலையில் போட்டு கொலை செய்து விட்டதாக கூறினார்.
ஆனால் அப்பெண் கூறியதை காவல்துறையினர் நம்பவில்லை. எனவே அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் நடந்த விஷயத்தை அப்பெண் ஒப்புக்கொண்டார். குடிபோதையில் இருந்த தனது கணவரை கொலை செய்ததை நளா ஒப்புக்கொண்டார். மகளை கற்பழிக்க முயன்றாக பழிபோட்டால் தண்டனை குறையும் என்று காவல்துறையிடம் அப்படிக் கூறியதாக தெரிவித்தார். இதனையடுத்து பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

