15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி!
15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடி உலக பயணங்கள் எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். தற்போது மார்ச் 26ல் வங்க தேசம் செல்ல இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1971ல் கிழக்கு பாகிஸ்தானில் பிரிந்து வங்கதேசமாக உருவாக்கப்பட்டது. இதன் 50வது ஆண்டு விழா கோலாகலமாக வங்கதேசத்தில் கொண்டாடப் படுவதை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 15 மாதங்களுக்குப் பின் பிரதமர் மோடி வெளிநாடு செல்வது இதுவே முதன் முறை. வங்கதேசத்தில் இருநாட்டு பிரதமர் பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் இணைந்து தாஹா - மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Next Story

