Theme Check

முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பேச்சு..!!

முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பேச்சு..!!

முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பேச்சு..!!
X

நாடு முழுவதும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

“இந்தியாவில் 92 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 70 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. நாட்டில் தொண்ணூற்று இரண்டு சதவீத வயது வந்தோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

முந்தைய கொரோனா தொற்றுகளுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவுகிறது. பதற்றமடைய வேண்டாம், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.” என்று கூறினார்.

Next Story
Share it