ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு !
ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு !

ட்விட்டர் நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையே ஒரு பணிப்போர் நடக்கிறது என்றே கூறலாம். அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கைகள், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கம், இந்தியாவின் வரைப்பட விவகாரம் போன்றவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ட்விட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நேற்று (ஜூன் 29) அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார், ட்விட்டர் இந்தியா மற்றும் ட்விட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. குழந்தைகள் ஆணையம் சமர்பித்த ட்விட்டர் பக்கங்கள், ட்விட்டர் வெளியிட்ட படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை ட்விட்டர் நிறுவனம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை ட்விட்டரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

