Theme Check

தகவல் அளிக்க வேண்டும்.. தலைமை ஆசிரியர்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு..!

தகவல் அளிக்க வேண்டும்.. தலைமை ஆசிரியர்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு..!

தகவல் அளிக்க வேண்டும்.. தலைமை ஆசிரியர்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு..!
X

பள்ளிகளுக்கு அருகே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரேமா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் பேசியதாவது: “பெற்றோரிடம் தங்களது பிரச்னைகளை சொல்ல தயக்கம் காட்டும் மாணவ, மாணவியர் ஆசிரியர்களான உங்களிடம் தெரிவிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோரை விட ஆசிரியர்களுடன் தான் அதிக நேரம் இருக்கின்றனர். பெற்றோர்களை அழைத்து அவர்களின் நடவடிக்கை குறித்து தெரிவிக்கும் கூட்டம் நடத்த வேண்டும்.

போக்சோ வழக்கு குறித்து தெரிந்து கொள்ளுங்கள். மாணவர்களின் பிரச்சினையை தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், பள்ளிகளுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை நடந்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து தகவல் அனுப்பும் படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சோதனையின்போது சிக்கும் கடைக்காரர்கள் மீது அபராதம் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.

Next Story
Share it