Theme Check

மருத்துவர்கள் மீது காவல்துறை தாக்குதல்: பிரதமருக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் !

மருத்துவர்கள் மீது காவல்துறை தாக்குதல்: பிரதமருக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் !

மருத்துவர்கள் மீது காவல்துறை தாக்குதல்: பிரதமருக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் !
X

டெல்லியில் போராடும் மருத்துவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் முதுநிலை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி டெல்லியில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர். அங்கு சென்று காவல்துறையினர் தடுத்துநிறுத்த முற்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் புகார் எழுந்தது.

protest

இதனை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் முதுநிலை கலந்தாய்வு முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

protest

இதனை எதிர்த்து கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறி டெல்லியில் ஷாஹீன் பூங்காவில் இருந்து உச்சநீதிமன்றம் நோக்கி மருத்துவர்கள் பேரணியாக சென்றனர். போராடும் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி சென்ற போது டெல்லி போலீஸ் இடை மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it