Theme Check

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடித்து துன்புறுத்திய போலீஸ்!!

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடித்து துன்புறுத்திய போலீஸ்!!

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடித்து துன்புறுத்திய போலீஸ்!!
X

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சுமதி என்ற பெண்ணை அடித்து துன்புறுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பிரபாகரன் (45) என்பவரின் வீட்டில் கடந்த 4ஆம் தேதி 10 பவுன் நகை மாயமானது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 7ஆம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் சுமதியை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

tut hosp

காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், பெண் காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் கடந்த 11ஆம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பெண் காவலர்கள் மூவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

tut hosp

மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டார். இதனிடையே இந்த முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலையை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it