Theme Check

கொடநாடு வழக்கு தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் போலீசார் விசாரணை..!!

கொடநாடு வழக்கு தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் போலீசார் விசாரணை..!!

கொடநாடு வழக்கு தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் போலீசார் விசாரணை..!!
X

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேகம் எடுத்த நிலையில், சமீப நாட்களாக வழக்கின் விசாரணை தொய்வடைந்து வந்தது.இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓவுமான விவேக் ஜெயராமன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

கோடநாடு பங்களாவோடு தொடர்புடைவர் விவேக் என்பதால், அவரை சென்னையில் இருந்து கோவை வரச்சொல்லி, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஏற்கனவே, இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சயான், மனோஜ் உள்ளிட்டோரிடமும் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனராஜின் சகோதரர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், தற்போது விவேக்கிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

Next Story
Share it