Theme Check

காவல் நிலையத்தில் பூனைகளை வளர்க்கும் போலீஸ்! ஏன் தெரியுமா?

காவல் நிலையத்தில் பூனைகளை வளர்க்கும் போலீஸ்! ஏன் தெரியுமா?

காவல் நிலையத்தில் பூனைகளை வளர்க்கும் போலீஸ்! ஏன் தெரியுமா?
X

வீட்டில் எலித் தொல்லை அதிகம் இருக்கிறது என்று பூனை வளர்ப்பது வழக்கம். ஆனால் கர்நாடகாவில் காவல் நிலையம் ஒன்றில் எலித் தொல்லை அதிகம் இருக்கிறது என்று போலீஸார் பூனை வளர்க்கின்றனர்.

கர்நாடகா மாநிலம், கவுரிபிதனூர் காவல்நிலையத்தில்தான் போலீஸார் பூனைகளை வளர்க்கின்றனர். காவல்நிலையத்தில் எலித் தொல்லை எல்லை மீறி போனதால் போலீஸார் பூனைகளை வளர்க்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

எலிகள் காவல்நிலையத்தில் உள்ள ஆவணங்களைக் கடித்துச் சேதப்படுத்தி வருகின்றன. எலிகளைப் பிடிக்கப் பல வழிகளை முயற்சி செய்தும் போலீஸாரால் எலிகளை முழுமையாகக் காவல்நிலையத்தை விட்டு அப்புறப்படுத்த முடியவில்லை.

cats blr

இந்நிலையில்தான் காவல்நிலையத்தில் இரண்டு பூனைகளைக் கொண்டு வந்து போலீஸார் வளர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு எலிகள் தொல்லை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எலிகளைப் பிடிப்பதற்காகக் காவல்நிலையத்தில், பூனைகளை போலிஸார் வளர்த்து வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it