Theme Check

கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!!

கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!!

கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!!
X

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டிணம் மருத்துவமனையில் கடந்த வாரம் இந்துஜா என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இரு தினங்களுக்கு முன் இந்துஜாவை அணுகிய பெண் ஒருவர், தூரத்து உறவினர் எனக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு தடுப்பூசி போடச் சென்றுள்ளார் இந்துஜா. திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தையோடு அந்தப் பெண் மாயமாகி இருந்தார்.

மருத்துவமனைக்கு முன்பிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர் குழந்தையைத் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது.

தனிப்படை அமைத்து களத்தில் இறங்கிய போலீசார், 24 மணி நேரத்தில் பண்டுபள்ளி என்ற கிராமத்தில் இருந்து குழந்தையை மீட்டு, திருட்டுப் பெண்ணையும் கைது செய்தனர்.

Tags:
Next Story
Share it