Theme Check

ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ்! ஓட்டுநர் தீக்குளிப்பு!!

ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ்! ஓட்டுநர் தீக்குளிப்பு!!

ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ்! ஓட்டுநர் தீக்குளிப்பு!!
X

சேலத்தில் காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், மதுபோதையில் கொண்டலாம்பட்டி அருகே ஆட்டோ ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவை மடக்கிய போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆட்டோவை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதனால், அங்கிருந்து சிறிது தூரம் நடந்துசென்ற ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ், நடு ரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

slm auto driver

இதனையடுத்து போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சந்தோஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

Next Story
Share it